முதியவர் கொலை வாலிபர் கைது

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரில் முதியவர் ஒருவர் தலையில் காயத்துடன் நேற்று காலை இறந்து கிடந்தார். தகவலின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். விசாரணையில், உதயா, 55 என்பதும், அப்பகுதியில் ரோட்டோரம் தங்கி, குப்பைகளை எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்தது தெரிந்தது.

திருப்பூர்:திருப்பூரில், முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரில் முதியவர் ஒருவர் தலையில் காயத்துடன் நேற்று காலை இறந்து கிடந்தார். தகவலின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர். விசாரணையில், உதயா, 55 என்பதும், அப்பகுதியில் ரோட்டோரம் தங்கி, குப்பைகளை எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்தது தெரிந்தது. இவருடன் சேலத்தை சேர்ந்த தனகோபால், 28 என்பவரும், குப்பை எடுத்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, மது அருந்துவது தொடர்பாக, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த தனகோபால், கீழே கிடந்த கல்லை எடுத்து உதயாவின் தலையில் தாக்கி தப்பியது தெரிந்தது. தலைமறைவாக இருந்த தனகோபாலை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X