'நீட்' இலவச பயிற்சி; 15 மையம் அமைப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி வழங்க, 15 மையங்கள் திருப்பூர் உறுதிசெய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:'நீட்' பயிற்சியானது காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது. பயிற்சி மைய பள்ளித்தலைமை ஆசிரியர் பயற்சி மையத்திற்கு நோடல் தலைமையாசிரியராக

திருப்பூர்:அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி வழங்க, 15 மையங்கள் திருப்பூர் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:

'நீட்' பயிற்சியானது காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது. பயிற்சி மைய பள்ளித்தலைமை ஆசிரியர் பயற்சி மையத்திற்கு நோடல் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டனர். மேலும், பயிற்சி மையத்தில் பணிபுரியும் நீட் ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி மைய நோடல் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாடத்துக்கு, இரு ஆசிரியர்கள் வீதம் ஒரு மையத்திற்கு எட்டு ஆசிரியர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். மையங்களாக, ஜெய்வாபாய் பள்ளி, கே.எஸ்.சி., பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி.

தாராபுரம் என்.சி.பி., நகரவை மேல்நிலைப்பள்ளி, மூலனுார் அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொங்கலுார் பி.வி.கே.என்., மேல்நிலைப்பள்ளி.

உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மையங்களாக செயல்படும். ஒரு பயிற்சி மையத்திற்கு, 70 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X