அரசாணையை ரத்து செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
பொங்கலுார்:பி.ஏ.பி., திட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் அரசாணை (எண்.66), கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள இத்திட்டத்தில் ஏற்கனவே விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதிலிருந்து மேலும் தண்ணீர் எடுத்தால் ஒட்டுமொத்த பாசனமும் கேள்விக்குறியாகிவிடும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட

பொங்கலுார்:பி.ஏ.பி., திட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் அரசாணை (எண்.66), கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள இத்திட்டத்தில் ஏற்கனவே விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதிலிருந்து மேலும் தண்ணீர் எடுத்தால் ஒட்டுமொத்த பாசனமும் கேள்விக்குறியாகிவிடும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

விவசாயிகளின் கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்துக்கான ஒப்பந்த புள்ளியை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். ஆனால், இத்திட்டத்திற்கான அரசு ஆணை இன்னும் ரத்து செய்யப்படவில்லை; மீண்டும் எப்போது வேண்டுமானாலும் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

எனவே, இத்திட்டத்திற்காக வெளியிடப்பட்ட அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாகவும், அரசாணையை ரத்து செய்யும் வரை போராட திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X