அதிக பயணிகளுடன் தனியார் பஸ் டிரைவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விழுப்புரத்தில் கலெக்டர் அதிரடி

Added : நவ 25, 2022 | |
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே பஸ்சில் அதிக பயணிகளை ஏற்றி, மாணவர்கள் படியில் தொங்கியபடி சென்றதால் டிரைவருக்கு, கலெக்டர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வேம்பி பகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்க நேற்று காலை 9:45 மணியளவில் கலெக்டர் மோகன் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக விழுப்புரத்திலிருந்து
 அதிக பயணிகளுடன் தனியார் பஸ் டிரைவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விழுப்புரத்தில் கலெக்டர் அதிரடி



விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே பஸ்சில் அதிக பயணிகளை ஏற்றி, மாணவர்கள் படியில் தொங்கியபடி சென்றதால் டிரைவருக்கு, கலெக்டர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வேம்பி பகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்க நேற்று காலை 9:45 மணியளவில் கலெக்டர் மோகன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக விழுப்புரத்திலிருந்து செஞ்சிக்குச் சென்ற வேலன் என்ற தனியார் பஸ்சில் அதிகளவில் கூட்டம் இருந்தது.

இதனால், கல்லுாரி மாணவர்கள் பஸ் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இதனைப் பார்த்த கலெக்டர், தனியார் பஸ்சை லட்சுமிபுரத்தில் நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டு வேறு பஸ்சில் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

பின், பஸ் டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை நடத்தி பஸ்சில் அதிகளவில் பயணிகளை ஏற்றியதற்காக டிரைவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X