மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து உரக்கடை உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை

Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுச்சத்திரம்-வியாபாரத்தில் கடன் அதிகமானதால், உரக்கடை உரிமையாளர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கணேஷ், 45; சிதம்பரம் பொய்யாபிள்ளைச்சாவடி பைபாஸ் அருகே, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கடை
 மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து உரக்கடை உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை



புதுச்சத்திரம்-வியாபாரத்தில் கடன் அதிகமானதால், உரக்கடை உரிமையாளர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கணேஷ், 45; சிதம்பரம் பொய்யாபிள்ளைச்சாவடி பைபாஸ் அருகே, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். தற்போது, சிதம்பரம் தாயம்மாள் நகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில், தொழிலில் ரூ.80 லட்சம் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த கணேஷ், சிதம்பரத்தில் உள்ள வீட்டில் மனைவி பிரபாவதி, 32; மகள் சங்கமித்ரா, 11; மகன் குருசரண், 9, ஆகிய மூவருக்கும் நேற்று காலை திராட்சை ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளார்.

மூவரும் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததால், மனமுடைந்த கணேஷ், புதுச்சத்திரம் அடுத்த அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன், பி.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே உரக்கடை வைத்துள்ள அக்பர் அலி என்பவருக்கு 'வாட்ஸ் ஆப்'பில் ஆடியோ ஒன்றினை அனுப்பி உள்ளார்.

அதில், 'தனக்கு வியாபாரத்தில் கடன் அதிகமாகி விட்டதாகவும், தனது தற்கொலைக்கு, சிதம்பரம் அடுத்த சிவாயம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன், தச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டி.எம்.ஆர்., சகோதரர்கள் ஐந்து பேர், நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் ஆகியோர் காரணம் என்றும், என் சாவுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்' என குறிப்பிட்டு உள்ளார்.

இவர்கள் கணேஷிடம் உரம் வாங்கிக் கொண்டு, அதற்குரிய பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது. இந்த ஆடியோவை கேட்ட அக்பர் அலி, கணேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், வீட்டில் கவலைக்கிடமாக இருந்த மூவரையும், பிரபாவதி யின் தங்கை கணவர் அருண் மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். பின், மூவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், கணேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூச்சி மருந்து கடை உரிமையாளர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், புதுச்சத்திரம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கணேஷ் எழுதிய கடிதம்

கணேஷ் தற்கொலை செய்வதற்கு முன், தனது நண்பருக்கு 'வாட்ஸ் ஆப்'ல் ஆடியோ அனுப்பியதுடன், தனது பாக்கெட்டில் இரண்டு பக்கத்திற்கு தனக்கு பணம் தர வேண்டியவர்களின் பெயர், அவர்கள் எவ்வளவு பணம் தர வேண்டும் உள்ளிட்ட விபரங்களை எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X