கோவையில் டிச.,2,3,4ல் வேலை வாய்ப்பு முகாம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
கோவை:கோவையில் மூன்று நாட்களில், 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியாக, 'மெகா' வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.நடிகர் விஜய் சேதுபதி, வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கோவையில் இந்த அமைப்பும், கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி நிறுவனங்களும் இணைந்து, மூன்று நாட்களுக்கு 'மெகா' வேலை வாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

கோவை:கோவையில் மூன்று நாட்களில், 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியாக, 'மெகா' வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி, வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கோவையில் இந்த அமைப்பும், கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி நிறுவனங்களும் இணைந்து, மூன்று நாட்களுக்கு 'மெகா' வேலை வாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

சரவணம்பட்டியிலுள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல்., வளாகத்தில், டிச., 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள், இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில் 22 பிரிவுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 20 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைக்கான ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.

இதற்கு எந்த கட்டணமும் இல்லை. முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் நிறுவனங்கள், http://jobfair.vvvsi.com எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X