இருளர் பெண்கள் பாலியல் வழக்கு: இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
விழுப்புரம்-திருக்கோவிலுார் அருகே இருளர் பெண்கள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சிறையில் அடைக்கப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த தி.மண்டபம் கிராம இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரை, கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் திருக்கோவிலுார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.அதில், ஒரு கர்ப்பிணி



விழுப்புரம்-திருக்கோவிலுார் அருகே இருளர் பெண்கள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த தி.மண்டபம் கிராம இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரை, கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் திருக்கோவிலுார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அதில், ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் 17 வயது சிறுமி உட்பட 4 பெண்களை, போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இந்த சம்பவத்தில், அப்போதைய திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கடந்த நவம்பர் 14ம் தேதி விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சீனிவாசனை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து திருக்கோவிலுார் போலீசார், சீனிவாசனை கைது செய்து, சிறைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, நெஞ்சு வலி ஏற்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர், விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி நேற்று முன்தினம் விண்ணப்பித்தார். அந்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, நேற்று மாலை விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X