பொள்ளாச்சி:பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், வணிக நிர்வாகவியல் துறை சார்பில், 'நிஜம் தேடும் நிழல்கள்' என்ற தலைப்பில், மாணவர்களுக்கான மனநல ஆரோக்கியம் சார்ந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். வணிக நிர்வாகத்துறை தலைவர் புவனேந்திரன் வரவேற்றார். டீன்கள் முனைவர் சரவணபாபு, உமாபதி பங்கேற்றனர்.
மனநலம் மற்றும் சிந்தனை சீர்திருத்த மையத்தின் நிறுவனர் விஜயகுமார் பேசுகையில், மனநலம் மற்றும் அமைதியான வாழ்வு குறித்து கருத்துக்களை தெரிவித்தார். மனித வாழ்வில், உளவியல் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது, அது, மாணவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் விளக்கி பேசினார்.
மாணவர்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டது. வணிகவியல் நிர்வாகவியல் துறை பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.