வால்பாறை:சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவுகின்றன. இதனால், அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு, நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. வால்பாறை நகராட்சி சார்பில், கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
வால்பாறையில், இதுவரை யாருக்கும் டெங்கு, காய்ச்சல் இல்லை. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, சீதோஷ்ணநிலை மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, குடிநீரை காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும். வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமலும், கொசு உற்பத்தி இல்லாமலும் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். ஈ மொய்க்கும் பண்டங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.