தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு வேலுார் இப்ராஹிம் குற்றச்சாட்டு

Added : நவ 25, 2022 | |
Advertisement
கடலுார்-'தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது' என, பா.ஜ., தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.கடலுாரில், அவர் அளித்த பேட்டி:பாஜ.,வில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து இணைகின்றனர். இதை, தி.மு.க.,வினரும், கூட்டணி கட்சியான வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவனும் தடுக்கின்றனர்.குறிப்பாக, பா.ஜ.,வை மதவாத கட்சி என்றும்,



கடலுார்-'தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது' என, பா.ஜ., தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.

கடலுாரில், அவர் அளித்த பேட்டி:

பாஜ.,வில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து இணைகின்றனர். இதை, தி.மு.க.,வினரும், கூட்டணி கட்சியான வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவனும் தடுக்கின்றனர்.

குறிப்பாக, பா.ஜ.,வை மதவாத கட்சி என்றும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான அமைப்பாகவும் சித்தரித்து அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.

இஸ்லாமிய இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, வெடிகுண்டு வைப்பது, வன்முறையை துாண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இஸ்லாமிய இளைஞர்கள் வன்முறையில் இறங்க, தி.மு.க.,வும், திருமாவளவனும் தான் காரணம்.

ஓட்டு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளனர். மத்திய பா.ஜ., ஆட்சியில் கல்வி, பொருளாதாரத்தில் முஸ்லிம்கள் முன்னேற என்ன வழி வகை செய்துள்ளது என்பது பற்றி புள்ளி விவரங்களுடன் பிரசாரம் செய்கிறோம்.

இதன் மூலமாக சிறுபான்மையினர் பா.ஜ.,வை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். சிறுபான்மையினர் பகுதிகளில் பிரசாரம் செய்தால் கலவரம் ஏற்படும் என, காவல் துறை கூறி முன்னெச்சரிக்கையாக பா.ஜ.,வினரை கைது செய்கிறது. தி.மு.க.,வின் ஏவல் துறையாக தமிழக காவல் துறை உள்ளது. கடலுார் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றைகூட மாவட்ட நிர்வாகம் முஸ்லிம்களுக்கு நிறைவேற்றவில்லை. ஓட்டு வங்கி அரசியலுக்காக அச்சத்தை மட்டுமே உருவாக்கும் தி.மு.க.,வின் நிலையை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஊழலின் கூடாரமாக தமிழகம் உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X