போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பஸ் ஸ்டாப் மாற்றம்; அதிகாரிகள் ஆய்வு

Added : நவ 25, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பஸ் ஸ்டாப்களை மாற்றுதல், பிரதான ரோட்டில் மையத்தடுப்புகள் அமைப்பது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.உடுமலை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், கடந்த, செப்., 30ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.இதில், தளி ரோடு, தாலுகா
 போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பஸ் ஸ்டாப் மாற்றம்; அதிகாரிகள் ஆய்வு

உடுமலை:உடுமலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பஸ் ஸ்டாப்களை மாற்றுதல், பிரதான ரோட்டில் மையத்தடுப்புகள் அமைப்பது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உடுமலை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், கடந்த, செப்., 30ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

இதில், தளி ரோடு, தாலுகா அலுவலகம் உள்ள கச்சேரி வீதி சந்திப்பு மற்றும் யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப்களை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில், நேற்று நகராட்சித்தலைவர் மத்தீன், கமிஷனர் சத்தியநாதன் மற்றும் போக்குவரத்துத்துறை, போலீசார் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.அதில், கச்சேரி வீதி சந்திப்பில் அமைந்துள்ள பஸ் ஸ்டாப்பை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலும், யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப்பை, தெற்கு நோக்கி செல்லும் பஸ்கள், எஸ்.என்.ஆர்., நகர் சந்திப்பிலும், வடக்கு நோக்கி நகருக்கு வரும் பஸ்கள், காமாட்சியம்மன் கோவில் அருகில் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

விரைவில் பஸ் ஸ்டாப் மாற்றி அமைத்து, உரிய நிழற்கூரை, அறிவிப்பு பலகை உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதே போல், நெடுஞ்சாலைத்துறையால்,பழநி ரோடு சந்திப்பு முதல், ராஜேந்திரா ரோட்டில், அண்ணா பூங்கா வரை மையத்தடுப்புஅமைக்கவும், அடுத்த கட்டமாக ரயில்வே ஸ்டேஷன் வரை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X