போலீஸ் செய்திகள்

Added : நவ 25, 2022 | |
Advertisement
1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், எஸ்.ஐ., பரமேஸ்வரன் மற்றும் போலீசார், பொள்ளாச்சி - வால்பாறை ரோடு, வஞ்சியாபுரம் பிரிவு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.அங்கு, சரக்கு வாகனத்தில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருப்பதை கண்டறிந்தனர். சந்தேகத்தின் பேரில், வாகனத்தை சோதனையிட்ட போது, 50 கிலோ


1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்



பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், எஸ்.ஐ., பரமேஸ்வரன் மற்றும் போலீசார், பொள்ளாச்சி - வால்பாறை ரோடு, வஞ்சியாபுரம் பிரிவு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அங்கு, சரக்கு வாகனத்தில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருப்பதை கண்டறிந்தனர். சந்தேகத்தின் பேரில், வாகனத்தை சோதனையிட்ட போது, 50 கிலோ எடை கொண்ட, 30 மூட்டைகளில், 1,500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தில் லோடு ஏற்றிய, ஆனைமலையை சேர்ந்த வீரக்குமார்,24, என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஆனைமலை, பொள்ளாச்சி பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவில் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய முயற்சித்ததை விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டார். அதன்பின், அரிசி மற்றும் சரக்கு வாகனம், இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


அடிதடி வழக்கு: ஒருவர் கைது



பொள்ளாச்சி, சிங்காநல்லுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாணிக்கம்,38. இவர், நேற்று முன்தினம் சிங்காநல்லுாரில் பொன்னுசாமிக்கு சொந்தமான பானிபூரி கடையில், அவரது கணவர் கருப்புசாமி மற்றும் மகன், மகளுடன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

அங்கு, அதே பகுதியை சேர்ந்த குடிபோதையில் இருந்த விஜயகுமார்,32, மாணிக்கத்தின் மகனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். குறுக்கிட்ட மாணிக்கம், கருப்புசாமியையும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார், விஜயகுமாரை கைது செய்தனர்.


அரசு பஸ் மோதி முதியவர் பலி



உடுமலை, கண்ணமநாயக்கனுார், ஜெ.ஜெ., நகரைச்சேர்ந்தவர், தங்கவேல், 72. உடுமலை - பழநிரோட்டில், பெரிய கோட்டை பிரிவு அருகே, ரோட்டை கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்த அரசு பஸ் மோதி பலியானார். உடுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


சூதாட்டம்: 6 பேர் கைது



பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் மகேந்திரன் என்பவரது வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட, குள்ளக்காபாளையம் மகேந்திரன், 48, பரமசிவம், 42, செல்வராஜ், 61, ரங்கதுரை, 48, சதாசிவம், 48, குமார், 43, ஆகிய, ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 18,300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X