அறிவியல் கண்காட்சி துவக்கம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
காரைக்கால்--காரைக்கால் மாவட்ட கல்வித்துறை சார்பில் மூன்று நாள் நடைபெறும் மண்டல அறிவியல் கண்காட்சி நேற்று துவங்கியது.கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி துவக்க விழாவிற்கு வட்டார ஆய்வாளர் சவுந்தரராசு வரவேற்றார். துணை கலெக்டர் ஆதர்ஷ் துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் மேல்நிலைக்கல்வி துணை இயக்குநர் ராஜேஸ்வரி,



காரைக்கால்--காரைக்கால் மாவட்ட கல்வித்துறை சார்பில் மூன்று நாள் நடைபெறும் மண்டல அறிவியல் கண்காட்சி நேற்று துவங்கியது.

கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி துவக்க விழாவிற்கு வட்டார ஆய்வாளர் சவுந்தரராசு வரவேற்றார். துணை கலெக்டர் ஆதர்ஷ் துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மேல்நிலைக்கல்வி துணை இயக்குநர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் துணை கலெக்டர் (பேரிடர்) பாஸ்கர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சோழசிங்கராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் 40 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், கணிதம், சுற்றுச் சூழல், இயற்கை வளம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 250 படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகள், மாநில அளவிலான கண்காட்சியில் இடம் பெறும்.

இக்கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X