புதுச்சேரி-லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் ஓவியம் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை பள்ளி தாளாளரான செல்வகணபதி எம்.பி., துவக்கி வைத்தார். பள்ளி முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியரின் 150 அறிவியல் படைப்புகளும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியரின் 350 அறிவியல் படைப்புகளும் இடம் பெற்றன.
மேலும், தமிழ், கணிதம், சமூக அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளின் படைப்புகள், ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்களும் இடம் பெற்றன. கண்காட்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.