மாணவர்கள் முற்றுகை

Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-மாணவர் சிறப்பு பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி உயர் கல்வித் துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மாணவர் சிறப்பு பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி கல்லுாரி மாணவர்கள் நேற்று, லாஸ்பேட்டையில் உள்ள உயர் கல்வி இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில், தாகூர் அரசு
 மாணவர்கள் முற்றுகை



புதுச்சேரி,-மாணவர் சிறப்பு பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி உயர் கல்வித் துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மாணவர் சிறப்பு பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி கல்லுாரி மாணவர்கள் நேற்று, லாஸ்பேட்டையில் உள்ள உயர் கல்வி இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில், தாகூர் அரசு கல்லுாரி, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, கதிர்காமம் மகாத்மா காந்தி அரசு கல்லுாரி, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி இயக்குனரான தனி அதிகாரி சவுமியா சந்தித்து, மாணவர் சிறப்பு பஸ்சை இயக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட சிறப்பு அதிகாரி, 20 நாளில் இலவச பஸ் இயக்கப்படும் என உறுதி அளித்ததை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X