ஆகம விதிகளில் தலையீடு ஹிந்து முன்னணி கண்டனம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்பூர்:கோவில்களின் ஆகம விதிகளில் அத்துமீறலில் ஈடுபடும் அறநிலையத்துறைக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:அர்ச்சகர்களின் பயிற்சி காலம், ஐந்து ஆண்டுகளில் இருந்து, ஓராண்டாக குறைக்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.ஏற்கனவே, அனைத்து ஜாதியினரும் தமிழகத்தில்

திருப்பூர்:கோவில்களின் ஆகம விதிகளில் அத்துமீறலில் ஈடுபடும் அறநிலையத்துறைக்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

அர்ச்சகர்களின் பயிற்சி காலம், ஐந்து ஆண்டுகளில் இருந்து, ஓராண்டாக குறைக்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே, அனைத்து ஜாதியினரும் தமிழகத்தில் அர்ச்சகர்களாக உள்ள நிலையில், ஏதோ தி.மு.க., வந்த பின்னர் தான், புதிதாக அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதாக பாசாங்கு செய்கிறது. இது முழுக்க முழுக்க ஓட்டு வங்கி அரசியலுக்காக செய்யப்படும் தந்திரம்.

அர்ச்சகர் பணி அரும்பணி, அர்ப்பணிப்பான பணி. இறைவன் சன்னதியில் பூஜை, புனஸ்காரங்கள் செய்வதற்கு சேவை மனப்பான்மையும், தொண்டுள்ளமும், இறையியல் பற்றிய ஞானமும் தேவை. அதற்கு, கடுமையான பயிற்சிகள் அவசியம்.

அறநிலையத்துறை வசமுள்ள கோவில்களில், ஹிந்து அல்லாத நபர்கள், ஹிந்து பெயரில் ஒளிந்து கொண்டு பணியாளர்களாக உள்ளனர். தி.மு.க., வை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பணியமர்த்தப்படுவதாக செய்திகள் வருகிறது. கோவில் ஆகம விதிகளில் மட்டும் மூக்கை நுழைப்பது ஏதோ உள்நோக்கத்தோடு மட்டுமே இருக்க முடியும் என்பது ஆன்மிக பெரியவர்களின் சந்தேகமாக உள்ளது.

வழிபாட்டு முறைகளில் தலையிடுவது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது. ஆகம விதிகளில் தலையிடுவதை அறநிலையத்துறை நிறுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X