மின் இணைப்பு தர ரூ. 5,000 லஞ்சம் உதவி இன்ஜி., மேற்பார்வையாளர் கைது

Added : நவ 25, 2022 | |
Advertisement
போத்தனுார்;கோவையில் தற்காலிக மின் இணைப்புக்கு, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி இன்ஜினியர், மேற்பார்வையாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.கோவை, போத்தனுார் அருகேயுள்ள பாரத் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்; ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் மலுமிச்சம்பட்டியில் வீடு கட்டி வருகிறார். இதற்கு தற்காலிக மின் இணைப்பு தர, செப்., 5ல் ஆன்லைனில் மலுமிச்சம்பட்டி மின்
 மின் இணைப்பு தர ரூ. 5,000 லஞ்சம் உதவி இன்ஜி., மேற்பார்வையாளர் கைது

போத்தனுார்;கோவையில் தற்காலிக மின் இணைப்புக்கு, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி இன்ஜினியர், மேற்பார்வையாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை, போத்தனுார் அருகேயுள்ள பாரத் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்; ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் மலுமிச்சம்பட்டியில் வீடு கட்டி வருகிறார். இதற்கு தற்காலிக மின் இணைப்பு தர, செப்., 5ல் ஆன்லைனில் மலுமிச்சம்பட்டி மின் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து, கட்டணம், 2,818 ரூபாயை செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து மின் கம்பம் அமைக்க, 37 ஆயிரத்து 910 ரூபாயும், செப்.,19ல் கட்டியுள்ளார். பின்னர், மின் வாரிய மேற்பார்வையாளர் சங்கர் கணேஷ், விண்ணப்பதாரர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு 7,000 ரூபாய் உதவி இன்ஜினியர் லஞ்சம் கேட்பதாக கூறியுள்ளார்.

மேலும் தனது மொபைல் போன் வாயிலாக, உதவி இன்ஜினியர் சுப்ரமணியனிடம் பேச வைத்துள்ளார்.

கார்த்திகேயன் தன்னால் அத்தொகையை கொடுக்க இயலாது என கூறியுள்ளார். இதையடுத்து உதவி இன்ஜினியர் 5,000 ரூபாய் தருமாறு பேரம் பேசியுள்ளார்.

அதிருப்தியடைந்த கார்த்திகேயன் நேற்று கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அவரிடம் கொடுத்தனுப்பினர். மேற்பார்வையாளர் சங்கர் கணேஷ், கார்த்திகேயனிடமிருந்து, 5,000 ரூபாயை பெற்றுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கைது செய்தனர்.

சிறிது நேரத்திற்கு பின், அங்கு வந்த உதவி இன்ஜினியர் சுப்ரமணியனும் கைது செய்யப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., திவ்யா இருவரிடமும் விசாரணை நடத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X