மாநில அந்தஸ்து இல்லாவிட்டால் புதுச்சேரி உருப்படாது: ரங்கசாமி ஆவேசம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுச்சேரி-மக்களுக்காக மாநில அந்தஸ்து கேட்கிறோம். கோப்புகள் சுற்றி வருவதை பார்த்தால், எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இப்படியே போனால் புதுச்சேரி உருப்படவே உருப்படாது என முதல்வர் ரங்கசாமி, தணிக்கை நாள் விவாதத்தில் பேசியுள்ளார்.புதுச்சேரி அண்ணாமலை ஓட்டலில் நேற்று நடந்த தணிக்கை நாள் விழாவில், அரசின் பல்வேறு துறைகளில் தணிக்கை பிரச்னைகள் குறித்து விவாதம் அனல் பறந்தது.புதுச்சேரி-மக்களுக்காக மாநில அந்தஸ்து கேட்கிறோம். கோப்புகள் சுற்றி வருவதை பார்த்தால், எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இப்படியே போனால் புதுச்சேரி உருப்படவே உருப்படாது என முதல்வர் ரங்கசாமி, தணிக்கை நாள் விவாதத்தில் பேசியுள்ளார்.

புதுச்சேரி அண்ணாமலை ஓட்டலில் நேற்று நடந்த தணிக்கை நாள் விழாவில், அரசின் பல்வேறு துறைகளில் தணிக்கை பிரச்னைகள் குறித்து விவாதம் அனல் பறந்தது. அரசு துறைகளில் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் செலவில் வாகனங்கள் வாங்கப்படுகின்றன. அவற்றின் காலாவதி முடிவதற்குள் ஏலம் விட முடியாமல் மக்கி வீணாவது குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

சபாநாயகர் செல்வம்: அரசு துறைகளில் உள்ள காலாவதியான வாகனங்களை ஏலம் விட பொதுக்கணக்கு குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மத்திய அரசு துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. முதல்வர் தலைமையில் அமைச்சரவை இருந்தும் முடிவெடுக்க ஏன் மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

அரசு செயலர் கேசவன்: சபாநாயகரின் கேள்வி நியாயமானது. இதனால் ஏலம் விட வேண்டிய வாகனங்களில் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. 'புல்லட் புரூப்' வாகனங்களை கூட ஏலம் விட முடிவதில்லை. புதுச்சேரி கோப்பு அங்கு ஏன் செல்லுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சத்திற்கும் தெரியவில்லை.

சபாநாயகர்: மத்திய உள்துறை அமைச்கம் கூட இந்த மாதிரியான கோப்புகள் ஏன் எங்களுக்கு வருகிறது என கேள்வி எழுப்புகிறது.

முதல்வர் ரங்கசாமி: இதுபோன்று நிறைய விஷயங்களில் ஏன் எங்களுக்கு கோப்புகளை அனுப்புகின்றீர்கள் என மத்திய அரசு கேள்வி எழுப்புகிறது. ஆனால் நாம் தான் அந்த கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்புகிறோம். இப்படி ஏன் அனுப்புகிறோம் என யாரை கேட்டாலும் தெரியவில்லை.

அரசு கொறடா ஆறுமுகம்: கோப்புகளை சுற்றலில் விடுவதற்காக இப்படி செய்கின்றனர்.

தணிக்கை அதிகாரிகள்: அதிகார பவர் அப்படி உள்ளது. இதில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இதனை மத்திய அரசு தான் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு துறையிலும் முடிவெடுக்க ஏற்படும் தேவையற்ற காலதாமதம் குறித்து தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளோம். சில முடிவுகளை எடுக்க ஓராண்டிற்கு மேலாக ஆகிவிடுகிறது.

சபாநாயகர்: ஓராண்டு அல்ல.. சில கோப்பு ஐந்தாண்டாகியும் வராமல் உள்ளது.

தணிக்கை அதிகாரிகள்: இதுபோன்ற காலதாமதம் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதிகாரத்தை மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் தெரிவிக்க வேண்டும். எந்த மாதிரியான காலதாமதம் என்ற புள்ளி விபரங்கள் கொடுத்தால் நாங்கள் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

முதல்வர்: இதுபோன்ற பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வர வேண்டும் என்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வந்தால் தான் முடியும். இல்லையென்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, மேடையில் இருந்த அரசு கொறடா ஆறுமுகத்திடம், நாம் எல்லோரும் மக்களுக்காக மாநில அந்தஸ்து கேட்கிறோம். கோப்புகள் சுற்றி வருவதை பார்த்தால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இப்படியே போனால் புதுச்சேரி உருப்படவே உருப்படாது. இதனை என் வாயால் சொல்வது கஷ்டமாக இருக்கிறது என்றார்.

புதுச்சேரி வளர்ச்சிக்கு மாநில அந்தஸ்து மட்டுமே தீர்வு என தொடர்ந்து வலியுறுத்தி வரும் முதல்வர் ரங்கசாமி, நேற்று நடந்த தணிக்கை அதிகாரிகள் விவாத கூட்டத்திலும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X