மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
காரைக்கால்--காரைக்காலில் மாணவர்களுக்கு ஒரு ரூபாய் பஸ் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நலன் கருதி அரசு சார்பில் ஒரு ரூபாய் கட்டணத்தில் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த ஒரு ரூபாய் பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.அதனால், நிறுத்தப்பட்ட ஒரு
 மாணவர்கள் ஆர்ப்பாட்டம்



காரைக்கால்--காரைக்காலில் மாணவர்களுக்கு ஒரு ரூபாய் பஸ் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நலன் கருதி அரசு சார்பில் ஒரு ரூபாய் கட்டணத்தில் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த ஒரு ரூபாய் பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதனால், நிறுத்தப்பட்ட ஒரு ரூபாய் பஸ் சேவையை மீண்டும் துவங்க வலியுறுத்தி மாணவர் கூட்டமைப்பு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கோவில்பத்து பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்களிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஒரு ரூபாய் பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். அதனையேற்று மாணவர்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X