காரைக்கால்,--தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, காரைக்கால் கடற்கரையில் துாய்மை பணி நடைபெற்றது.
பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தேசிய மாணவர் படை மாணவர்கள் நேற்று காரைக்கால் கடற்கரையில் துப்புரவு பணி மேற்கொண்டனர்.
கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ் தலைமையில், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் குமரவேல் முன்னிலையில் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியில் 50க்கு மேற்பட்ட மானவர்கள் கலந்து கொண்டனர்.