எஸ்.பி.ஐ., மண்டல அலுவலகத்தில் வாழ்நாள் சான்று சிறப்பு முகாம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-ஸ்டேட் பாங்க் புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில் ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.ஜிப்மரில் உள்ள அப்துல்கலாம் கலையரங்கம் வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ஸ்டேட் பாங்க் புதுச்சேரி மண்டல மேலாளர் சதீஷ்பாபு தலைமை தாங்கினார். சென்னை தலைமை அலுவலக முதன்மை மேலாளர் சந்திரமவுலீஸ்வரன், மேலாளர் துவாரகநாத், மண்டல அலுவலக
 எஸ்.பி.ஐ., மண்டல அலுவலகத்தில் வாழ்நாள் சான்று சிறப்பு முகாம்



புதுச்சேரி,-ஸ்டேட் பாங்க் புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில் ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

ஜிப்மரில் உள்ள அப்துல்கலாம் கலையரங்கம் வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ஸ்டேட் பாங்க் புதுச்சேரி மண்டல மேலாளர் சதீஷ்பாபு தலைமை தாங்கினார்.

சென்னை தலைமை அலுவலக முதன்மை மேலாளர் சந்திரமவுலீஸ்வரன், மேலாளர் துவாரகநாத், மண்டல அலுவலக முதன்மை மேலாளர்கள் சீனிவாசன், முன்னா குமார்ஜா, மேலாளர்கள் பிரபாகரன், பாலசுப்ரமணியன், ராஜீவ், ஜிப்மர் கிளை மேலாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன், முதுநிலை ஆலோசகர் ரமன்ஜித் கவுர், மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை கூடுதல் இயக்குநர் மஞ்சு குப்தா, உதவி பொது மேலாளர் நடராஜன், தலைமை அலுவலக உதவி பொது மேலாளர் சரவணன், சைதன்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், 150 பேருக்கு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முகாமை, கிளை மேலாளர் ராஜதுரை, மண்டல அலுவலக உதவி மேலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

முன்னதாக, ஓய்வூதியர்கள் சந்தேகங்களுக்கு, மத்திய அரசு அதிகாரிகள் பதிலளித்தனர். இதில் ஓய்வூதியர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் விஸ்வநாதன் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முதன்மை மேலாளர் சரவணன் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X