ஜல்ஜீவன் திட்டத்தில் டம்மி குடிநீர் குழாய்; நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

Added : நவ 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
மரக்காணம் : வானுார் அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஒழிந்தியப்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசு நிதி மூலம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.76 லட்சம் ரூபாய்
Jaljeevan, Water Pipeline, Villupuram, ஜல்ஜீவன் , குடிநீர் குழாய், விழுப்புரம், மத்திய அரசு , Central Govt,

மரக்காணம் : வானுார் அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஒழிந்தியப்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசு நிதி மூலம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 752 மீட்டர் பைப் லைன் மற்றும் குடிநீர் குழாய் அமைத்தல் பணி நடந்தது.

ஆனால் ஒரு சில வீடுகளுக்கு மட்டும் குடிநீர் குழாய் அமைத்து விட்டு மற்ற வீடுகளுக்கு சரியான முறையில் குடிநீர் குழாய் வைக்காமல், தெருக்களில் பைப் லைன் போடாமல் டம்மி குழாய் வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

தற்போது அந்த பணி முடிந்து விட்டதாக அதிகாரிகளை சரிகட்டி நிதி முறைகேடு நடந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
25-நவ-202215:03:42 IST Report Abuse
duruvasar 2014 தேர்தல் பொது சென்னை ஹார்பர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வேனில் நின்றபடி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா சுருதி தப்பாமல் பாடிய எதனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே , சொந்த நாட்டிலே என்ற அந்த காட்சி நினைவில் வந்து போகிறது . கர்மா எப்படியேல்லாம் விட்டு ஆட்டுது .
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
25-நவ-202214:48:15 IST Report Abuse
Tamilnesan திருடர்கள் முன்னேற்ற கழக ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
25-நவ-202209:45:15 IST Report Abuse
N. Srinivasan அரசு அதிகாரிகள் மேல்தான் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிறகுதான் அந்த திருட்டு வேலை செய்த கம்பெனி. அரசின் பணம் எப்படி எல்லாம் வீண் போகிறது திருட்டுத்தனத்தின் உச்சம்
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
25-நவ-202214:46:06 IST Report Abuse
சீனிஅப்படில்லாம் பண்ணா சட்டசபையே ஜெயில்ல தான் நடத்தனும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X