லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
புதுச்சேரி-உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சார்பில் நாளை 26ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து நகராட்சி கமிஷனர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரியில் நடைபெறும் இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரபல நிறுவனங்களில் 2,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப



புதுச்சேரி-உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சார்பில் நாளை 26ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரியில் நடைபெறும் இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரபல நிறுவனங்களில் 2,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., (மெக்கானிக்கல் ஆட்டோ மொபைல்), ஓட்டல் நிர்வாகம், நர்சிங், பயோடெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, அப்ளைய்டு மைக்ரோபயாலஜி, லைப் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பயோமெடிக்கல், உளவியல், கணிதம், புள்ளியியல், ஆங்கிலம் பட்டப்படிப்பு முடித்த, 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் குறைந்த பட்சம் 10 நகல் சுயகுறிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்களை கொண்டுவரவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 0413-2962001; 78068 01143 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் oulgaretclc@gmail.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X