எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

Added : நவ 25, 2022 | |
Advertisement
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று பகல் 12;00, மணிக்கு சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டரில் 3 வாலிபர்கள் பக்தர்களை பார்த்து ஆபாசமாக திட்டியுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வளத்தி சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், அந்த வாலிபர்களை
Melmalayanur, Sub Inspector,Angalamman kovil, சப் இன்ஸ்பெக்டர் , வாலிபர்கள், மேல்மலையனுார்,  அங்காளம்மன் கோவில், Youth,  Angalamman Temple,



அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று பகல் 12;00, மணிக்கு சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டரில் 3 வாலிபர்கள் பக்தர்களை பார்த்து ஆபாசமாக திட்டியுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வளத்தி சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், அந்த வாலிபர்களை கண்டித்தார்.

ஆத்திரமடைந்த வாலிபர்கள் சப்-இன்ஸ்பெக்டரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து, தகராறு செய்த 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், மதுராந்தகம் தாலுகா அருங்குணத்தை சேர்ந்த மணி மகன் ரஞ்சித்குமார்,19, செஞ்சியை சேர்ந்த சிவகுமார் மகன் சதீஷ்குமார், 21, வளத்தியை சேர்ந்த குமார் மகன் தமிழ்வளவன், 20, என தெரியவந்தது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில், 3 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X