நெட்டப்பாக்கம்-ஏரிப்பாக்கத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி இறந்தார்.
ஏரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வசந்தா 80, இவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement