ஆக்கிரமிப்பில் காரியாபட்டி ஒன்றிய அலுவலக ரோடு போக்குவரத்திற்கு இடையூறால் சிரமத்தில் மக்கள்

Added : நவ 25, 2022 | |
Advertisement
காரியாபட்டி- -காரியாபட்டி ஒன்றிய அலுவலக ரோட்டில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருதால் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.காரியாபட்டியில் ஒன்றிய அலுவலகம், உழவர் சந்தை, எம்.எல்.ஏ., அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பயணியர் விடுதி என பல்வேறு அலுவலகங்களும் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட்டை



காரியாபட்டி- -காரியாபட்டி ஒன்றிய அலுவலக ரோட்டில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருதால் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டியில் ஒன்றிய அலுவலகம், உழவர் சந்தை, எம்.எல்.ஏ., அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பயணியர் விடுதி என பல்வேறு அலுவலகங்களும் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியே அலுவலகங்களுக்கு செல்ல 50 அடி அகலம் உள்ள ரோடு உள்ளது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.

எம்.எல். ஏ., அலுவலகத்திற்கு அவ்வப்போது கட்சியினர் கார்களில் வருவர். உழவர் சந்தைக்கு ஏராளமான வாடிக்கையாளர்களும், நெடுஞ்சாலைத்துறை, பயணியர் விடுதி உள்ளிட்டவற்றிற்கு மக்கள் அதிகளவில் வருவர். மேலும் அச்சம்பட்டி பகுதிக்கு செல்ல இந்த ரோட்டைத் தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எப்போதும் இந்த ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இந்த ரோட்டை வாகன ஸ்டாண்ட் போல் பலர் டூவீலர்களை நிறுத்திவிட்டு வெளியூர்களுக்கு செல்வதாலும், ரோட்டோர காய்கறி கடைகளை வைத்தும் வணிக வளாக கடை வைத்திருப்போர் பாதி ரோட்டை ஆக்கிரமித்துத்துள்ளனர். இதனால் 50 அடி ரோடு, 10 அடி ரோடாக மாறி போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது.

இதனால் மக்கள் இந்த ரோட்டை கடக்க படாத பாடு படுகின்றனர். ஏற்கனவே இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு இங்கு இருந்த ரோட்டோர கடைகளை அப்புறப்படுத்தினர். வணிக வளாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இதையடுத்து போட்டி போட்டுக் கொண்டு மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி போக்குவரத்திற்கு பிரச்சனையின்றி இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X