வத்திராயிருப்பு--வத்திராயிருப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு கோயம்புத்தூருக்கு நேரடி பஸ் சேவையை அரசு போக்குவரத்து கழகம் துவக்கி உள்ளது.
இதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விருதுநகர் மண்டல அதிகாரி கூறியதாவது:
வத்திராயிருப்பு டிப்போவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் விழா காலங்களில் இரவு 9:00 மணிக்கு வத்திராயிருப்பில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, திருமங்கலம், மதுரை, ஒட்டன்சத்திரம், தாராபுரம், பல்லடம் வழியாக கோயம்புத்தூருக்கு நேரடி பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
வத்திராயிருப்பு வியாபாரி சங்கம், பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.