ஸ்ரீவி.,யில் அனாதையாக நிற்கும் கார்கள் கேள்விக்குறியாகும் கோயில்களின் பாதுகாப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்--ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில்கள், பஜார் வீதிகள் உட்பட முக்கிய இடங்களில் அனாதையாக நிற்கும் வாகனங்களால் கோயில்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.சமீபத்தில் கோவையில் கார், மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தையடுத்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆட்கள் இல்லாமல் பல நாள்களாக நிற்கும் கார்களை போலீசார் சோதனை



ஸ்ரீவில்லிபுத்துார்--ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில்கள், பஜார் வீதிகள் உட்பட முக்கிய இடங்களில் அனாதையாக நிற்கும் வாகனங்களால் கோயில்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

சமீபத்தில் கோவையில் கார், மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தையடுத்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆட்கள் இல்லாமல் பல நாள்களாக நிற்கும் கார்களை போலீசார் சோதனை செய்தனர்.

ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கோயில்கள், ரத வீதிகள், மாடவீதிகள், கிளைச்சிறை பகுதிகளில் கேட்பாரற்றநிலையில் கார்கள் பல மாதங்களக அனாதையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் பதிவு எண்கள் உடைய வாகனங்கள் மட்டுமின்றி, வெளிமாவட்ட வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. இதனால் ஆண்டாள் கோயிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அப்பகுதியில் குடியிருப்பவர்களின் கார்கள் விவரம் சேகரித்து, மற்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களின் வாகனங்கள் மாடவீதியில் அனுமதிக்கப்படக்கூடாது.

இதேபோல் கிளைச் சிறை அருகில் பழுதடைந்த நிலையில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது சிறையின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

பெரிய மாரியம்மன் கோயில் முன்புறம் கோயில் வாசலை மறைக்கும் வகையில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட கார்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பஜார் வீதிகள், ரத வீதிகள் உட்பட மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பல கார்கள் நிறுத்தப்படுகிறது.

எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கோயில்கள், மாட வீதிகள், ரத வீதிகள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள், தங்களுக்கு சொந்தமான இடங்களில் வாகனங்களை நிறுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X