புறக்காவல் நிலையங்களில் போலீசார் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Added : நவ 25, 2022 | |
Advertisement
மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழி சப் டிவிசன்களில் டி.எஸ்.பி., அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஒவ்வொரு சப் டிவிசன்களுக்கும் கீழே பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்குகின்றன.இவை தவிர குற்ற சம்பவங்களை பொருத்தும், ஏரியாவை பொருத்தும், போலீஸ் ஸ்டேஷன் துாரத்தை பொருத்தும் மாவட்ட நிர்வாகத்தின்
 புறக்காவல் நிலையங்களில் போலீசார் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழி சப் டிவிசன்களில் டி.எஸ்.பி., அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஒவ்வொரு சப் டிவிசன்களுக்கும் கீழே பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்குகின்றன.

இவை தவிர குற்ற சம்பவங்களை பொருத்தும், ஏரியாவை பொருத்தும், போலீஸ் ஸ்டேஷன் துாரத்தை பொருத்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புறக்காவல் நிலையத்தில் குறைந்தது ஒரு போலீசாராவது ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.

ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்ட புறக் காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பதில்லை. சில நேரங்களில் மட்டுமே பெயரளவிற்கு செயல்படுகின்றது.

இங்கு போலீசார் பணியில் இருக்கும் பொழுது அப்பகுதியில் மது அருந்தி தகராறு செய்தல் உள்ளிட்ட சிறு சிறு குற்ற சம்பவங்கள் நடப்பதில்லை. போலீசார் பணியில் இல்லையென்றால் பல்வேறு சிறு சிறு குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

இரவில் பெண்கள் தைரியமாக நடமாட முடியவில்லை. இதனால் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமே நிறைவேறவில்லை.

எனவே மாவட்டம் முழுவதும் உள்ள புறக்காவல் நிலையங்களில் போலீசார் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X