செங்கமலப்பட்டியில் அடிப்படை வசதியின்றி முக்கு பிள்ளையார் கோயில் பகுதி மக்கள் தவிப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
சிவகாசி-சிவகாசி செங்கமலப்பட்டி ஊராட்சி முக்கு பிள்ளையார் கோயில் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.செங்கமலப்பட்டி ஊராட்சி நாரணாபுரம் ரோடு விலக்கில் முக்கு பிள்ளையார் கோயில் பகுதி உள்ளது. வளர்ந்து வரும் இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் இதுவரையிலும் தெருக்களில் ரோடு, வாறுகால் வசதி ஏற்படுத்தி தரவில்லை.இதனால் சிறு
  செங்கமலப்பட்டியில் அடிப்படை வசதியின்றி முக்கு பிள்ளையார் கோயில் பகுதி மக்கள் தவிப்பு



சிவகாசி-சிவகாசி செங்கமலப்பட்டி ஊராட்சி முக்கு பிள்ளையார் கோயில் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

செங்கமலப்பட்டி ஊராட்சி நாரணாபுரம் ரோடு விலக்கில் முக்கு பிள்ளையார் கோயில் பகுதி உள்ளது. வளர்ந்து வரும் இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் இதுவரையிலும் தெருக்களில் ரோடு, வாறுகால் வசதி ஏற்படுத்தி தரவில்லை.

இதனால் சிறு மழை பெய்தாலும் தண்ணீர் தெருவில் தேங்கி விடுகின்றது. தெரு முழுவதும் சேறும் சகதியுமாக மாறி மக்கள் நடமாட முடியவில்லை. தெருக்களில் கழிவு நீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி தொற்று நோயினை ஏற்படுத்துகிறது.

மேலும் இப்பகுதியில் தெருவிளக்குகள் இல்லாமல் மக்கள் இருளில் தவிக்கின்றனர். குடிநீர் இணைப்பும் இதுவரையிலும் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X