பள்ளி கல்லுாரி செய்திகள்

Added : நவ 25, 2022 | |
Advertisement
பயிற்சி பட்டறைசிவகாசி: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி 3 ம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பயனுள்ள சந்தைப்படுத்துதல் என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடந்தது. கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி முன்னிலை வகித்தார். உதவிப்பேராசிரியர் பிரசன்னா வரவேற்றார். மாணவி சிவநந்தனா சிறப்புவிருந்தினரை



பயிற்சி பட்டறை

சிவகாசி: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி 3 ம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பயனுள்ள சந்தைப்படுத்துதல் என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடந்தது. கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி முன்னிலை வகித்தார். உதவிப்பேராசிரியர் பிரசன்னா வரவேற்றார். மாணவி சிவநந்தனா சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். யாமினி ஹெர்பல்ஸ் நிர்வாக இயக்குநர் சைலஜா, வணிகவியல் துறை உதவி பேராசிரியர் தாழைபுஷ்பம், உணவுக்கட்டுப்பாடு ஊட்டச்சத்து துறை உதவிப்பேராசிரியர்கள் மெர்லின் ராணி, ஜான்சிராணி பேசினர். மாணவி கவுசல்யா நன்றி கூறினார்.

விருந்தியல் சொற்பொழிவு

சிவகாசி: அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதுகலை தமிழ் துறை சார்பில் விருந்தியல் சிறப்பு சொற்பொழிவு நடந்தது கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். முதுகலை தமிழ் துறை தலைவர் சிவனேசன் துவக்கி வைத்தார். மாணவி பவித்ரா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிங்கப்பூர் தமிழ் இலக்கிய களம் தலைவர் ரத்தின வெங்கடேசன் பேசினார். மாணவி மாரிக்கனி நன்றி கூறினார். மாணவி கோகிலா தொகுத்து வழங்கினார். தமிழ் துறை தலைவர் அருள்மொழி, பேராசிரியர்கள் இளவரசு, பொன்னுராஜன், வினோத் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X