காரியாபட்டி--காரியாபட்டி கிழவனேரியில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் கார்த்திக் துவக்கி வைத்தார்.
பி.புதுப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் கணேஷ், மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோய் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, மலடு நீக்கம் சிகிச்சை, தடுப்பூசி போடுவதன் நன்மைகள் பற்றி விளக்கம் அளித்தார்.
செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, கன்று, ஆடுகளில் குடற்புழு நீக்கம் சிகிச்சை அளிக்கப்பட்டது. கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டன. 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிகிச்சை பெற்றன.
சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு கன்று வளர்ப்பு பிரிவில் பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை ஆய்வாளர் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.