காட்சி பொருளாக முதல்வர் திறந்த வேளாண்மை விரிவாக்க மையம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
முதுகுளத்துார்,-முதுகுளத்துாரில் வேளாண்மை விரிவாக்கம் மையம் புதிய கட்டடம் இரண்டு மாதத்திற்கு முன்பு முதல்வரால் காணொளியில் திறக்கப்பட்டும் பயன்பாட்டிற்குவராமல் காட்சிப்பொருளாக உள்ளது.முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகம்அருகே தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டடம் மற்றும் சேமிப்பு கிடங்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.2
 காட்சி பொருளாக முதல்வர் திறந்த வேளாண்மை விரிவாக்க மையம்



முதுகுளத்துார்,-முதுகுளத்துாரில் வேளாண்மை விரிவாக்கம் மையம் புதிய கட்டடம் இரண்டு மாதத்திற்கு முன்பு முதல்வரால் காணொளியில் திறக்கப்பட்டும் பயன்பாட்டிற்குவராமல் காட்சிப்பொருளாக உள்ளது.

முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகம்அருகே தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டடம் மற்றும் சேமிப்பு கிடங்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டது. புதிய கட்டடம் கட்டப்பட்டதால்முதுகுளத்தூர் -பரமக்குடி சாலையில் ஆற்றுப்பாலம் அருகே தற்காலிகமாக வேளாண்மை அலுவலகம் இயங்கி வருகிறது.

எட்டு மாதங்களுக்கு முன் ஒரு சில பணிகள் முடிவடையாத நிலையில் கட்டடம் காட்சிப்பொருளாக இருந்து வந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து செப்.6ல் சில பணிகள் முடிவடையாத நிலையில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்தார்.

இந்நிலையில், முதல்வர் திறந்து வைத்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் இரண்டு மாதத்திற்கும் மேலாக காட்சிப்பொருளாக உள்ளது. தற்காலிக கட்டடத்தில் போதுமான இட வசதியின்றி உர மூடைகள் பாதுகாக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X