குடிநீர் குழாய் உடைப்பால் 5 கிராமங்களில் பாதிப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
முதுகுளத்துார்--முதுகுளத்துார் அருகே வரத்து கால்வாய் சீரமைப்பின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்ததால் அப்பனேந்தல், நாகனேந்தல், கேளல், கே.ஆர்.பட்டினம், நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஐந்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த கிராமங்களில் 1000 குடும்பங்களுக்கும்மேல் வசிக்கின்றனர். பரளையாறு வரத்து கால்வாய் வழியாக கீழத்தூவல்,
 குடிநீர் குழாய் உடைப்பால் 5 கிராமங்களில் பாதிப்பு



முதுகுளத்துார்--முதுகுளத்துார் அருகே வரத்து கால்வாய் சீரமைப்பின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்ததால் அப்பனேந்தல், நாகனேந்தல், கேளல், கே.ஆர்.பட்டினம், நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஐந்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமங்களில் 1000 குடும்பங்களுக்கும்மேல் வசிக்கின்றனர். பரளையாறு வரத்து கால்வாய் வழியாக கீழத்தூவல், மேலத்தூவல், கே.ஆர்.பட்டினம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடந்த சில ஆண்டுகளாக வரவில்லை. இதனால் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

கிராம மக்களின் சொந்த முயற்சியால் வரத்து கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் வரத்து கால்வாய் அருகே செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதுகுளத்தூர் அருகே அப்பனேந்தல், நாகனேந்தல், கேளல், கே.ஆர்.பட்டினம், நெடுங்குளம் ஆகிய கிராமங்களுக்கு கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாகவே காவிரி குடிநீர் சப்ளை இல்லை.

இதனால் கிராம மக்கள்சிரமப்படுகின்றனர். டிராக்டர் தண்ணீரும் வராததால் குடிநீருகாக தவிக்கும்அவல நிலை ஏற்பட்டுஉள்ளது. 5 கி.மீ.,ல் உள்ள பெருங்கருணை நீரேற்று நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் சேகரிக்கின்றனர்.

குழாய் உடைந்து 5 நாட்களாகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை, என மக்கள் குற்றம் சாட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X