அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் புதர் மண்டியதால் பாம்புகள் படையெடுப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
ராமநாதபுரம்,ராமநாதபுரம் அருகே புல்லங்குடியில் உள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் நடை பாதைகள் மட்டுமின்றி, கட்டடம், வளாகம்முழுவதும் புதர் மண்டியிருப்பதால் தொடர்ந்து பாம்புகள் படையெடுக்கும் நிலையில், நேற்று விடுதி மாணவர் ஒருவர் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கல்லுாரியில் இ.சி.இ., மூன்றாம் ஆண்டில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த



ராமநாதபுரம்,ராமநாதபுரம் அருகே புல்லங்குடியில் உள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் நடை பாதைகள் மட்டுமின்றி, கட்டடம், வளாகம்முழுவதும் புதர் மண்டியிருப்பதால் தொடர்ந்து பாம்புகள் படையெடுக்கும் நிலையில், நேற்று விடுதி மாணவர் ஒருவர் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லுாரியில் இ.சி.இ., மூன்றாம் ஆண்டில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மாணவர் ரமேஷ் 20,படிக்கிறார். கல்லுாரி விடுதியில் தங்கியுள்ள இவர், நேற்று முன்தினம் மாலை கல்லுாரி மெயின் கேட் அருகே நடந்து சென்ற போது பாம்பு கடித்தது.

மயங்கிய மாணவரை உடனடியாக ராமநாதபுரம்அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனையில் அனுமதித்தனர். தேவிபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கல்லுாரி மெயின் கேட் அருகே மாணவரை பாம்பு கடித்தது சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடை பாதை, விடுதி, வகுப்பு கட்டடங்களை சுற்றிலும் புதர் மண்டியுள்ளது. இவற்றை கல்லுாரி நிர்வாகம் அகற்றாமல் அலட்சியம் காட்டுகிறது.

புதர் மண்டிய வளாகத்தில் மாலை, இரவு நேரங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட பாம்புகள் வந்துள்ளதால் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.

எனவே கல்லுாரி, விடுதி வளாகத்திற்குள் செடி,கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X