சிவகங்கை மாவட்டத்திற்கு 440 டன் யூரியா உரம் இருப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்திற்கு 440 டன் யூரியா உரம் விவசாயிகளுக்கு வழங்குவதற்காகஇருப்பு வைக்கப் பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் பருவமழை பொழிவு காரணமாக 70 ஆயிரம் எக்டேரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பயிர்கள் 20 முதல் 70 நாட்கள் வயதுள்ள பயிராக உள்ளது.இப்பயிர்களுக்கான அடியுரம் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால்தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள்,சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்திற்கு 440 டன் யூரியா உரம் விவசாயிகளுக்கு வழங்குவதற்காகஇருப்பு வைக்கப் பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பருவமழை பொழிவு காரணமாக 70 ஆயிரம் எக்டேரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பயிர்கள் 20 முதல் 70 நாட்கள் வயதுள்ள பயிராக உள்ளது.

இப்பயிர்களுக்கான அடியுரம் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால்தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் நிறுவனங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு இரண்டாவது, மூன்றாவது தவணை உரமிடுவதற்கு தேவையான உரங்களை இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கோரமண்டல் நிறுவனத்திலிருந்து 100 டன், எம்.எப்.எல்., நிறுவனத்திடமிருந்து 60 டன், ஐ.பி.எல்., நிறுவனத்திடமிருந்து 280 டன் யூரியா உரம் வரவழைக்கப்பட்டு தொடக்க வேளாண் கூட்றவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டத்தில் யூரியா 2087 டன், டி.ஏ.பி., 370 டன், பொட்டாஷ் 671 டன், காம்ப்ளக்ஸ் 1825 டன் அனைத்து வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற மற்றும் பெறாத விவசாயிகளுக்கும் உரங்கள் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்குரிய அடங்கல் மற்றும் ஆதார் அட்டையை எடுத்துச்சென்று விற்பனை முனைய கருவி மூலம் பில் செய்து உரங்களை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் மதுசூதன்ரெட்டிதெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X