சுடுகாட்டில் பிறந்த நாள் கொண்டாடிய நபர்

Added : நவ 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
தானே: சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளை களைவதற்காக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு நபர் சுடுகாட்டில் 'கேக்' வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரத்தன், 54. இவர், கடந்த 19ம் தேதி தன் பிறந்த பிறந்த நாளை சுடுகாட்டில் வைத்து விமரிசையாக
Ghostbusters,birthday,crematorium

தானே: சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளை களைவதற்காக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு நபர் சுடுகாட்டில் 'கேக்' வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரத்தன், 54. இவர், கடந்த 19ம் தேதி தன் பிறந்த பிறந்த நாளை சுடுகாட்டில் வைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவில், 40 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 'கேக்' வெட்டிய கவுதம் ரத்தன், விருந்தினர்களுக்கு பிரியாணி வழங்கி உபசரித்தார்.


சுடுகாட்டில் பெரிய 'பேனர்' வைத்து, கவுதம்கேக் வெட்டுவது பற்றிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுதம், ''சூனியம் மற்றும் பேய் குறித்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே சுடுகாட்டில் வைத்து என் பிறந்த நாளை கொண்டாடினேன்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijayaraghavan - tuticorin,இந்தியா
25-நவ-202214:43:23 IST Report Abuse
vijayaraghavan மெழுகுவர்த்தி ஊதுவதும் கேக் வெட்டுவதும் தான் ஆகச் சிறந்த மேற்கத்திய மூட நம்பிக்கைகள்
Rate this:
Cancel
Kalyanaraman - Chennai,இந்தியா
25-நவ-202211:13:35 IST Report Abuse
Kalyanaraman இவருடைய பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு கொண்டாடியிருந்தால்..
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
25-நவ-202208:09:40 IST Report Abuse
Anantharaman Srinivasan இது ஒன்றும் புகழ்ந்து பேசக்கூடிய Subject அல்ல. இவன் அந்தஊர் வீரமணி.. சென்னையில் பூந்தமல்லி போரூர் பகுதிகளில் சுடுகாடுகளாகயிருந்த இடங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிளாட் போடப்பட்டு இன்று வீடுகள் கட்டப்பட்டுள்ளது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X