சிவகங்கையில் பெருகுகிறது புற்றீசல் போல் கடைகள்: வருவாயை இழந்து வரும் நகராட்சி

Added : நவ 25, 2022 | |
Advertisement
சிவகங்கை நகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை இடத்தில் இரும்பு பெட்டி கடைகள் 2017ம் ஆண்டு துவக்கினர். நகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள இதர கடைகள் ஏலம் போகாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த கடைகளை எடுத்தவர்களும் நகராட்சி நிர்ணயித்த மாத வாடகையை முறையாக செலுத்துவதில்லை. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் கடை வைக்க நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதேபோன்று உணவு
 சிவகங்கையில் பெருகுகிறது  புற்றீசல் போல் கடைகள்: வருவாயை இழந்து வரும்  நகராட்சி



சிவகங்கை நகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை இடத்தில் இரும்பு பெட்டி கடைகள் 2017ம் ஆண்டு துவக்கினர். நகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள இதர கடைகள் ஏலம் போகாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த கடைகளை எடுத்தவர்களும் நகராட்சி நிர்ணயித்த மாத வாடகையை முறையாக செலுத்துவதில்லை. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் கடை வைக்க நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதேபோன்று உணவு பொருட்கள் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் சான்றும் பெற வேண்டும்.

ஆனால் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் சிவகங்கையில் நகராட்சி, தேசிய நெடுஞ்சாலை இடத்தில் புற்றீசல் போல் இரும்பு பெட்டிக்கடைகள் பெருகி வருகின்றன. இதுபோன்ற கடைகளால் பெரும் விபத்து நடக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நகரில் புற்றீசல் போல் பெருகும் இரும்பு பெட்டிக்கடைகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தடை விதித்து அரசு இடங்களை பாதுகாக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X