மானாமதுரை வாரச்சந்தை ரோடு ஒரு வழி பாதையாக மாற்றப்படுமா வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
மானாமதுரை,--மானாமதுரையில் வாரச்சந்தையன்று கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் உள்ளதால் அந்த ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மானாமதுரையில் வாரந்தோறும் வியாழன்று வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு மதுரை, திருப்புவனம்,சிவகங்கை, இளையான்குடி, நரிக்குடி,வீரசோழன் உள்ளிட்ட பகுதிகளில்
 மானாமதுரை வாரச்சந்தை ரோடு  ஒரு வழி பாதையாக மாற்றப்படுமா வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு



மானாமதுரை,--மானாமதுரையில் வாரச்சந்தையன்று கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் உள்ளதால் அந்த ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மானாமதுரையில் வாரந்தோறும் வியாழன்று வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு மதுரை, திருப்புவனம்,சிவகங்கை, இளையான்குடி, நரிக்குடி,வீரசோழன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

பொருட்களை வாங்குவதற்காக மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் வந்து செல்கின்றனர். வாரச்சந்தை அமைந்துள்ள தெ.புதுக்கோட்டை -பரமக்குடி ரோட்டில் வியாபாரிகள் கடைகளை அமைப்பதால் அன்று அந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மானாமதுரையில் வாரசந்தை நடக்கும் வியாழக்கிழமையன்று பரமக்குடி ரோட்டை ஒரு வழி பாதையாக மாற்றினால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

போலீசாரும், நகராட்சி நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X