கொள்ளையடிக்க சதி : 5 பேர் கைது
சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.ஐ., பிரபா ஆகியோர் தலைமையில் போலீசார் முத்துப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நவ., 23 காலை 9:00 மணிக்கு தனியார் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் முத்துப்பட்டி முத்தையா மகன் வேல்ராஜன் 20, வேம்பத்துார் பாலாமணி மகன் ஊர்க்காவலன் 27, மதுரை காமராஜர்புரம் ஜெயராமன் மகன் முத்துமாணிக்கம் 22, வி.புதுக்குளம் அஜித் (எ) சப்பாணி 22, மானாமதுரை ஜவஹர் மகன் வீரமணி 19, ஆகிய 5 பேரும் கத்தி, வீச்சரிவாள், மிளகாய் பொடி பாக்கெட்டுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது முத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. 5 பேரையும் கைதுசெய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
கிணற்றில் விழுந்து பலி
திருப்புவனம்: கீழடி கிருஷ்ணன் மனைவி பேச்சியம்மாள் 75. இவர் நவ.,20 ம் தேதி காலை 6:00 மணிக்கு தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த கிணற்றில் தவறிவிழுந்து இறந்தார். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் விசாரிக்கிறார்.
தற்கொலை
சிவகங்கை: மலம்பட்டி பெரியணன் மகன் தமிழ்வாணன் 55. இவருக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.விரக்தியில் எலிபேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரிக்கிறார்.