'இந்திய கரன்சி மதிப்பு சரியவில்லை; இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை'

Added : நவ 25, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
திருப்பூர்: ''அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்தாலும், பெரும்பாலான உலக கரன்சிகளை போல் சரியவில்லை. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்,'' என்று 'பியோ' தலைவர் சக்திவேல் கருத்து தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களை பல்வேறு தரப்பினருடன் மேற்கொண்டுள்ளார். காணொலி வாயிலாக
Indian rupee, Indian Currency, dollar, US dollar, இந்திய கரன்சி

திருப்பூர்: ''அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்தாலும், பெரும்பாலான உலக கரன்சிகளை போல் சரியவில்லை. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்,'' என்று 'பியோ' தலைவர் சக்திவேல் கருத்து தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களை பல்வேறு தரப்பினருடன் மேற்கொண்டுள்ளார். காணொலி வாயிலாக நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் பங்கேற்று பேசியதாவது:

அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்தாலும், பெரும்பாலான உலக கரன்சிகளை போல் சரியவில்லை. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். இது நம் பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பு.


latest tamil news



சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு சந்தைப்படுத்த உரிய ஆதரவு தர வேண்டும். சந்தைப்படுத்தலுக்கு, முந்தைய ஆண்டு ஏற்றுமதியில் குறைந்தபட்சம் 0.5 சதவீதம் கார்பஸ் நிதியுடன் ஒரு ஏற்றுமதி மேம்பாட்டு நிதியை உருவாக்க வேண்டும். இதற்காக ஏற்றுமதியாளர் செலவுக்கு உரிய அதிகபட்ட வரி விலக்கு அளிக்க வேண்டும்.

பெரும்பாலான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் விகிதம் இரட்டை இலக்க குறியை கடந்து விட்டது. தற்போது 11 முதல் 13 சதவீதத்தில் உள்ளது. இது இன்னும் அதிகரிக்கும். அக்., 2021க்கு முன் இருந்த வட்டிச் சமன்படுத்தும் பலன்களான, 5 சதவீதம் உற்பத்தி நிறுவனங்களுக்கும், 3 சதவீதம் பிற 410 கட்டண கோடுகளுக்கும் மீட்டெடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.

விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால், சுற்றுலா மட்டுமின்றி கைவினைப் பொருள், நகை, தரை விரிப்புகள், ஜவுளி, காதி, தோல் பொருள், ஆயுஷ் மற்றும் மூலிகை பொருட்கள் அழகு சாதன பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு உதவும். இவ்வாறு, சக்திவேல் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202215:09:06 IST Report Abuse
அப்புசாமி கச்சா எண்ணெயை அடிமாட்டு விலைக்கு ரஷ்யா கிட்டேருந்து வாங்குனாலும் 188 நாளா அதே விலைக்கு விக்கிறாங்க. கேட்டா டாலர் மதிப்பு ஏறிடுச்சுன்னு அப்போ மட்டும் சொல்லுவாங்க.
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
25-நவ-202215:29:20 IST Report Abuse
duruvasarபொருளாதார அறிவின் உச்சத்தை இன்னும் தொடவில்லை . தொடர் முயற்சி தேவை ....
Rate this:
25-நவ-202215:56:14 IST Report Abuse
ஆரூர் ரங்இந்த விலையிலும் இந்தாண்டு பெட்ரோல் சேல்ஸ் 20 சதவீதம்😇 கூடுதலாக ஆகியுள்ளது. இன்னும் விலையைக் குறைத்தால் அன்னியச் செலாவணி மிச்சமிருக்காது....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-நவ-202214:20:52 IST Report Abuse
duruvasar அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க , உலக மகா பொருளாதார ஜாம்பவான்களாகிய சிதம்பரம் , ரகுராம் ராஜன் , ராகுல் எனப்படும் மும்மூர்த்திகள் சொல்வதைத்தான் கேட்போம் .அதையும் ஐயா ஜெயரஞ்சன் வழிமொழி செய்திருக்கவேண்டும் .இனியும் தமிழன் ஏமாறமாட்டான் .
Rate this:
Cancel
K.Varadharajulu - Chennai,இந்தியா
25-நவ-202212:30:30 IST Report Abuse
K.Varadharajulu இது என்னடா புதுவிதமான உருட்ட இருக்கு டொல்லோருக்கு நிகரான மதிப்பு இப்போ 80 ரூபாய்க்கு மேல பொய் விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X