திண்டுக்கல்--பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்ற செயற்கைக்கோள் தொடர்பான ஐந்து நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்ற , அகரம் அரசு மேல்நிலை பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் நவீன்கார்த்திக், கார்த்திகேயன் , காசிபாளையம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு மாணவர் ஸ்ரீகாந்த், காமலாபுரம் திரவியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி மகாலெட்சுமி, பிரசித்தி வித்யோதயா பள்ளி 5ம் வகுப்பு மாணவன் முகமது அப்துர் ரஹ்மான் கலெக்டர் விசாகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆசிரியர்கள் கந்தவேல், முபாரக்சாதிக்அலிகான், ஆசிரியை லோகமணி பங்கேற்றனர்.