வடிகால் அடைப்புகளால் ரோட்டில் தேங்கும் கழிவுநீர்

Added : நவ 25, 2022 | |
Advertisement
வடமதுரை--வடமதுரையில் கழிவு நீர் வடிகால்கள் முறையான பராமரிப்பின்றி கிடந்ததால் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் தேங்க மக்கள்,வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். வடமதுரையிலிருந்து திருச்சி,திண்டுக்கல்,நத்தம்,செந்துறை, வேடசந்துார்,திருக்கண், போஜனம்பட்டி போன்ற பகுதிகளுக்கு ரோடுகள் செல்கின்றன. திண்டுக்கல் - திருச்சி இடையே மணப்பாறை நகராட்சிக்கு அடுத்த
 வடிகால் அடைப்புகளால் ரோட்டில் தேங்கும் கழிவுநீர்



வடமதுரை--வடமதுரையில் கழிவு நீர் வடிகால்கள் முறையான பராமரிப்பின்றி கிடந்ததால் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் தேங்க மக்கள்,வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.

வடமதுரையிலிருந்து திருச்சி,திண்டுக்கல்,நத்தம்,செந்துறை, வேடசந்துார்,திருக்கண், போஜனம்பட்டி போன்ற பகுதிகளுக்கு ரோடுகள் செல்கின்றன. திண்டுக்கல் - திருச்சி இடையே மணப்பாறை நகராட்சிக்கு அடுத்த நிலையில் பெரிய ஊராக வடமதுரை திகழ்கின்றது.

இங்கு மக்கள் அதிகம் புழங்குவதால் எந்நேரமும் அரசு பஸ்கள் வந்து செல்கின்றன.ஒன்றியத்தின் தலைமையிடமான இங்கு 3 மேல்நிலை பள்ளிகள்,4 தனியார் துவக்க பள்ளிகளும் செயல்படுகின்றன.

இடவசதி இருந்தும் பஸ் ஸ்டாண்ட் அமையாமல் பஸ் நிறுத்தம் என்ற பெயரிலேயே உள்ளது

இந்நிலையில் வடமதுரை-திண்டுக்கல்ரோடு, நான்குவழிச்சாலை உள்ளிட்ட ரோடுகளில் அமைக்கப்பட்ட கழிவு நீர் வடிகாலின் கட்டமைப்புகள் சிதைந்து பல இடங்களில் கழிவு நீர் ரோட்டில் செல்கின்றது.

மழை நேரங்களில் ரோடெங்கும் கழிவு நீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது.தொடரும் இப்பிரச்னை யால் மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.மழை காலங்களில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு கழிவு நீர் குளம் போல் ரோட்டில் தேங்கி மக்களை பாடாய்படுத்துகிறது.

நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலை த்துறையினர் மவுனமாக உள்ளனர்.


நடவடிக்கை எடுக்க வேண்டும்



கோவிந்தராஜன்,காங்., மாவட்ட பொது செயலாளர், வடமதுரை:வடமதுரை திண்டுக்கல் ரோட்டில் சந்தை பகுதியிலிருந்து மந்தை குளம் நோக்கி கழிவு செல்ல நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வடிகால் தற்போது அடைப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ரோடு வளைவில் இருந்து வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டிற்கு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மக்கள் கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


வடிகா ல்கள் அடைப்பு



நீலக்கண்ணன்,சமூக ஆர்வலர், கொம்பேரிபட்டி: வடமதுரையில் நான்குவழிச்சாலை சந்திப்பில் திசைக்கு தலா ஒன்று என 4 பாலங்கள் இருந்தன.2 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ஒட்டன்சத்திரம் ரோடு விரிவாக்க பணியில் வடமதுரை இணைப்பு ரோட்டில் இருந்த பாலத்தை விரிவாக்கம் செய்யாமல் மூடிவிட்டனர்.

திருச்சி ரோட்டில் இருக்கும் பாலத்தில் நீர் மறுபக்கம் வெளியேற வழியின்றி நீர் வழித்தடம் அடைப்பட்டுள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலங்கள் பயனற்று கிடைக்கிறது.கழிவு நீர் பயணிக்க வழியின்றி ரோட்டில் தேங்கி நிற்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.


-சுகா தார வளாகம் அமைக்க வேண்டும்



ராஜேந்திரன், புதிய தமிழகம் முன்னாள் ஒன்றிய செயலாளர், வடமதுரை: மக்கள் பெருமளவில் வந்து செல்லும் இடங்களில் கழிவு நீர்

வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.தெற்கு மாரியம்மன் கோயில் தெருவிலும் சில இடங்களில் கழிவு நீர் வாடிகால் அடைப்பட்டு கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது. இப்பகுதியில் வடிகால்,ரோடு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்.பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.


நெடுஞ்சாலைத்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளோம்



எஸ்.கணேசன், பேரூராட்சி கவுன்சிலர், வடமதுரை: வடமதுரை பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ரோட்டை கடக்கும் வடிகால் கட்டமைப்பு பணியை நெடுஞ்சாலைத்துறையினர் செய்ய முடியும். பொதுமக்களின் அவதியை குறைக்கும் வகையில் ரோட்டில் கழிவு நீர் பாய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதே போல பை பாஸ் நால் ரோடு சந்திப்பு பகுதியிலும் பேரூராட்சி நிர்வாகம் கட்டமைப்பு பணிகளை செய்ய முடியாது.இருந்தும் தற்காலிக தீர்வாக இங்கு தேங்கும் கழிவு நீரை

வெளியேற்ற வாய்க்கால் வெட்டினோம்.எரியோடு திசை பாலத்தில் அடைப்பு இருப்பதாக கூறி நீர் தொடர்ந்து செல்ல முடியாது எனக் கூறி அப்பகுதியினர் வாய்க்காலை மூடிவிட்டனர்.

கழிவு நீர் வாய்க்கால் வெட்டி கான்கிரீட் முறையிலான கட்டுமானம் அமைத்து பயனற்று கிடக்கும் பாலங்கள் வழியே கழிவுநீர் செல்ல வழி செய்தாலே நீர் தேங்கும் பிரச்னை முடிவுக்கு வரும். நெடுஞ்சாலைத்துறையினரிடம் இப்பணியை செய்ய வலியுறுத்தியுள்ளோம்,என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X