ரேஷனில் மாதம் ரூ.1,000 இலவசம்: திட்டத்தை துவக்க முன்னோட்டமா?

Added : நவ 25, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் உள்ள 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களில், 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை. அவர்களுக்கு விரைவில் கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இது மாதம் 1,000 ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை துவக்குவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ரேஷன் கடைகள் வாயிலாக 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மானிய
Chennai, Tamil Nadu, Ration Card, சென்னை, தமிழகம், அரிசி ரேஷன் கார்டு, கூட்டுறவு ,  Rice Ration Card, Cooperative, Tamil Nadu Scheme,

சென்னை: தமிழகத்தில் உள்ள 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களில், 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை. அவர்களுக்கு விரைவில் கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இது மாதம் 1,000 ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை துவக்குவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரேஷன் கடைகள் வாயிலாக 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, பேரிடர் நிவாரணமும் வழங்கப்படுகின்றன.

சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் 1,000ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்சியை பிடித்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இதனால், பெண்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு, தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறுவது தொடர்பான பயிற்சி கூட்டம், நேற்று நடந்தது. அதை கூட்டுறவுசங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.


latest tamil newsஅதில், சண்முகசுந்தரம் பேசியதாவது: ரேஷன் கடைகளில், 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதில் 14.60 லட்சம் கார்டுதார்களுக்கு வங்கி கணக்கு துவக்கப்படாமல் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

வங்கி கணக்கு துவக்கப்படாமல் உள்ள கார்டுதாரர்களை, அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், புதிய கணக்கு துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மத்திய அரசு, இலவச மற்றும் மானிய திட்டங்களில் முறைகேட்டை தடுக்க, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அதற்குரிய தொகையை செலுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதை பின்பற்றி, தமிழக அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிட்டுள்ளது. எனவே, வங்கி கணக்கு இல்லாத, 14.60 கார்டுதாரர் களுக்கு கணக்கு துவக்கும் நடவடிக்கை, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, அரசு விரைவில் செயல்படுத்த இருப்பதற்கான முன்னோட்டமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-நவ-202214:52:29 IST Report Abuse
S.Baliah Seer எல்லா மக்களும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவருக்கும் குடும்பம் உள்ளது. குடும்ப வருவாய் இல்லாமல் எந்த குடும்பமும் இல்லை.அதுபோல் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களும் அரசுக்காக வேலை செய்கின்றனர்.அவர்களில் சரியாக வேலை செய்யாதோருக்கு உரிய தண்டனைகளும் வழங்க முடியும்.முதலில் அரசு அவர்களுக்கு பணத்தட்டுப்பாடு இல்லாமல் சம்பளம் வழங்க வேண்டும்.பின்னர்தான் குடும்ப ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது சம்பந்தமாக முடிவு எடுக்க வேண்டும்.ஒருபுறம் ஆயிரம் ரூபாய் மறுபக்கம் மக்களை உறிஞ்சும் டாஸ்மாக்..கொடுக்கவும் வேண்டாம்,எடுக்கவும் வேண்டாம்.க லைஞரின் வீட்டு வசதி வாரிய திட்டம் தற்போது மக்களுக்கு பயனளிக்க வில்லை.அவைகளின் விலை ஏழை எளியோரை அண்டவிடவில்லை.ரியல் எஸ்டேட் விலை எட்டா உயரத்தில் உள்ளது. மத்திய மாநில அரசுகள் வீடு,மனை விலைகளைக் கட்டுப்படுத்தினால் போதும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-நவ-202214:16:05 IST Report Abuse
duruvasar இப்படி எதெற்கெடுத்தாலும் மதிய அரசு வழிகாட்டுதல் , வற்புறுத்தல் என சொல்லுவதால் இவர்களுக்கு சுயமாக எதுவும் தெரியாது என்பதை உறுதிசெய்கிறார்கள் . ,
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
25-நவ-202212:15:43 IST Report Abuse
M  Ramachandran பொறுங்கள் ஒவ்வொரு அமைச்சரும் எவ்வளவு சம்பாதிருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து கொண்டிருக்கிறார்கள் . அது முடிந்தவுடனவர்களிடமிருந்து நன்கொடையை பெற்று மாதம் தொஆர்மாள்ள சில மாதங்களுக்கு மட்டுமா என்று தெரியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X