நத்தம்--நத்தம் சாணார்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் மெட்ராஸ் ஐ கண்வலி நோய் பரவல் வேகமாவதால் பள்ளிகளில் விடுப்பு எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நத்தம் பகுதியில் 'மெட்ராஸ் ஐ' கண் வலி நோய் அதிகமாக பரவுகின்றது
தொற்றுநோய் சாணார்பட்டி, கோபால்பட்டி,நத்தம் உள்ளிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் இந்நோய் அதிகரித்துள்ளது.மாணவர்களிடம் பரவும் இந்நோய் அதிவேகமாக பள்ளிகளில் பரவ ஆரம்பித்தது.
இதனால் பள்ளியில் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.பின் அவர்கள் வீடுகளில் ஓய்வு எடுக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மற்ற இடங்களுக்கு கருப்பு கண்ணாடிகள் அணிந்து பள்ளிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தாமாக மெடிக்கல்களில் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
சுகாதாரத்துறையினர் பரவும் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டாக்டர்கள் கூறியதாவது: மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து மூன்று நாட்கள் வரை அதன் பாதிப்பு இருக்கும்.ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவும் என்பதால் அடிக்கடி கை கழுவுவது கண்ணாடி அணிவது அவசியம்.
நோய் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மெடிக்கல் ஷாப்புகளில் கண் வலி மருந்துகள் வாங்கி பயன்படுத்துவது தவறு.வலி அதிகமாக இருப்பின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உரிய சிகிச்சை பெற்று கொள்ளுங்கள்,என்றனர்.