மரங்கள் வளர்ப்பதால் காற்று மாசடைவதை தடுக்கலாம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
திண்டுக்கல்-''மரங்கள் வளர்ப்பதினால் காற்று மாசுபடுவதை தடுக்கலாம்''என திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பி.மணிமாறன் தெரிவித்தார்.ரோடுகளில் ஆங்காங்கே குப்பைகள் எரிகிறாங்களே.மக்கள் ரோட்டோரங்களில் குப்பைகளை தீயில் எரிப்பதால் இருமல், தும்மல்,ஆஸ்துமா காற்றினால் பரவக்கூடிய நோய்கள் அதிகம் பரவுகிறது.அடிக்கடி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள்
 மரங்கள் வளர்ப்பதால் காற்று மாசடைவதை தடுக்கலாம்



திண்டுக்கல்-''மரங்கள் வளர்ப்பதினால் காற்று மாசுபடுவதை தடுக்கலாம்''என திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பி.மணிமாறன் தெரிவித்தார்.

ரோடுகளில் ஆங்காங்கே குப்பைகள் எரிகிறாங்களே.

மக்கள் ரோட்டோரங்களில் குப்பைகளை தீயில் எரிப்பதால் இருமல், தும்மல்,ஆஸ்துமா காற்றினால் பரவக்கூடிய நோய்கள் அதிகம் பரவுகிறது.அடிக்கடி இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்.

நம் மாவட்டத்தில் காற்று மாசு அதிகளவில் இருந்ததே.

நம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு கருவி மூலம் அளவீடுகள் நடத்தப்பட்டு கணக்கிடப்பட்டது. காற்று மாசு நடக்கவில்லை.

வாகன பயன்பாடுகள் அதிகரித்துள்ளதே.

மக்கள் அன்றாட தேவைக்காக வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.சில வண்டிகளில் அதிக புகை வந்தால் போக்குவரத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு செய்றீங்களா.

மக்களிடம் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு அதிகளவில் செய்கிறோம்.அது மட்டுமில்லாமல் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்.

போகி பண்டிகையில் பழைய பொருட்களை எரிப்பாங்களே.

ஜனவரியிலிருந்து திண்டுக்கல் மக்களிடம் காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போகி பண்டிகையில் ரோட்டோரம் குப்பைகள்,துணிகள் எரிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டல்கள் தொழிற்சாலை களில் கரும்புகை அதிகளவில் வெளிவருகிறதே.

விதிமுறைகள் படி தற்போது வரையில் ஓட்டல்கள்,தொழிற்சாலை கள் செய்யப்பட்டு வருகிறது.மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

காற்று மாசடைவதை தடுக்க என்ன செய்யலாம்.

மக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு மரங்களை வளர்ப்பதினால் காற்று மாசடைவதை தடுக்கலாம்.நவீன உலகில் மரங்களை நடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.காற்று துாய்மையானதாக மாறி ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்,என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X