கடலுார் : கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில், தீச்சட்டி ஏந்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐகோர்ட் அறிவுறுத்தலின்படி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு ரூ.2000 உதவித் தொகை வழங்க வேண்டும், மாதாந்திர உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.
தற்போது மாற்றுத் திறனாளிகள் போலி தேசிய அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது; அத்துடன், அதை வழங்கிய மருத்துவர் மற்றும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நல சங்கத்தினர் கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.
சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் அமரேசன் முன்னிலை வகித்தனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் மனு அளித் துவிட்டு கலைந்து சென்றனர்.