சின்னமனூர்--தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு செங்கரும்பு வளர்ந்து தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பரப்பு குறைந்துள்ளதால் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழகம் முழுவதும் தைப் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
பாரம்பரிய கலாச்சார நடை முறைகளில் செங்கரும்பு முக்கிய இடம் பிடிக்கிறது.
தேனி மாவட்டத்தில் செங்கரும்பு சாகுபடி பிற ஊர்களை விட சின்னமனுாரில் அதிகளவில் நடக்கிறது.
இந்தாண்டு நல்ல விலை கிடைக்கும் என்று சின்னமனுார் வேளாண் உதவி இயக்குநர் பாண்டி கூறியுள்ளார். அவர் கூறுகையில், " 10 மாதங்கள் சாகுபடி காலமாகும்.
தேனி மாவட்டத்தில் இங்கு செங்கரும்பு அதிகம் உள்ளது. பைபாஸ் சாலை அமைக்கப்பட்டதால் கரும்பு வயல்கள் கடந்தாண்டை விட பரப்பு குறைந்துள்ளது.
கடந்தாண்டை விட 75 ஏக்கர் குறைந்துள்ளது. 125 ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது. பரப்பு குறைந்துள்ளதால் நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்றார்.