பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை வழங்கினார்.
பரங்கிப்பேட்டை அப்பாசாமி படையாட்சி தெருவை சேர்ந்தவர் முகமது யாசின். இவரது, கூரை வீடு நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை நேற்று வழங்கி, ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் ராசாங்கம், மாவட்ட இணை செயலர் ரெங்கம்மாள்,நகர செயலர் மாரிமுத்து, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர்,இளைஞரணி செயலர் ஜெய்சங்கர், பாலசுப்ரமணியம், சுரேஷ், கார்த்தி, பன்னீர், பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.