ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி. பள்ளியில் ' தினமலர் - பட்டம்' வினாடி வினா

Added : நவ 25, 2022 | |
Advertisement
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி. வித்யாலயா சி.பி.எஸ்.சி., பள்ளியில் 'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.'தினமலர்' 'பட்டம்' இதழும், புதுச்சேரி கோனேரிக்குப்பம் ஆதித்யா இன்ஸ்டிடியூட்ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் அண்டு ரிசர்ச் கல்வி நிறுவனமும் இணைந்து 'பதில் சொல்;அமெரிக்கா செல்' என்ற வினாடி வினா போட்டியை ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி. வித்யாலயா

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி. வித்யாலயா சி.பி.எஸ்.சி., பள்ளியில் 'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.

'தினமலர்' 'பட்டம்' இதழும், புதுச்சேரி கோனேரிக்குப்பம் ஆதித்யா இன்ஸ்டிடியூட்ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் அண்டு ரிசர்ச் கல்வி நிறுவனமும் இணைந்து 'பதில் சொல்;அமெரிக்கா செல்' என்ற வினாடி வினா போட்டியை ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி. வித்யாலயா சி.பி.எஸ்.சி., பள்ளியில் நடத்தின.

எஸ்.பி.ஜி. பள்ளியில் இந்த போட்டியை, பள்ளியின் தாளாளர் பார்த்தசாரதி, இயக்குனர்கள் சங்கீதா, முரளி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல்வர் பினேஷ்ஜான் வரவேற்றார். ஆதித்யா கல்வி நிறுவனத்தின் மாணவர் கவுன்சிலர் உரைகவி ரவி வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து நடந்த வினாடி வினா போட்டியில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் நிகிலன், ஆஸ்டின் ஷாலமன் ஆகியோர் முதலிடமும், ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் தமிழ்செல்வி, தாட்சாயினி ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர்.

முதலிடம் பெற்றவர்களுக்கு, 'தினமலர் கேடயம்' மற்றும் சான்றிதழ், இரண்டாமிடம் பெற்ற மாணவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X